‘காக்கா முட்டை’யால் ‘கிருமி’க்கு கூடுதல் வரவேற்பு..!

மதயானைக்கூட்டம் நாயகன் கதிர், மற்றும் ரேஷ்மி மேனன் இருவரும் நடிக்கும் படம் என்றால் ‘கிருமி’ படமும் பத்தோடு பதிநோன்றாகத்தான் மாறியிருக்கும். ஆனால் ரஜினியிடம் நீண்டகாலம் உதவியாளராக இருந்த ஜெயராமன் தான் இந்தப்படத்தை தயாரித்துள்ளார் என்றதுமே ரசிகர்களிடம் ‘கிருமி’ கொஞ்சம் கவனம் பெற்றது..

இந்தப்படத்திற்கு கதை எழுதியிருப்பவர் யாரோ ஒரு மணிகண்டனாம் என்றுதான் நான்கு மாதங்கள் முன்புவரை பேச்சு. ஆனால் ‘காக்கா முட்டை’ படத்தின் இயக்குனர் மணிகண்டன் தான் ‘கிருமி’ படத்திற்கு கதை எழுதியுள்ளார் என்றதுமே ‘காக்கா முட்டை’யின் பலத்தால் கிருமியின் பெருமை வேகமாக பரவ ஆரம்பித்துள்ளது.

அந்த சூட்டோடு சூடாக ‘கிருமி’ படத்தின் இசைவெளியீட்டு விழாவையும் நடத்தி முடித்துவிட்டார்கள். இந்த விழாவில் கலந்துகொண்டு இசைத்தகட்டை பெற்றுக்கொண்ட விஜய்சேதுபதி ‘கிருமி’ படத்தை தான் பார்த்துவிட்டதாகவும் மிகவும் சிறப்பான திரைக்கதை என்றும் பாராட்டியிருக்கிறார்.. இந்தப்படத்திற்கு கே இசையமைத்துள்ளார்.