சசிகுமாரின் ‘கிடாரி’ இன்று ரிலீஸ்..!

Kidaari Movie Still 2
சசிகுமார் படங்களுக்கென்றே ஏ, பி, சி என மூன்று சென்டர்களிலும் ரசிகர்கள் கூட்டம் உண்டு. ஆனால் கடந்த 2015ல் எந்த ஒரு படத்தையும் ரிலீஸ் பண்ணாமல் ரசிகர்களை ஏமாற்றிய சசிகுமார் இந்த வருடம் அதற்கு வட்டியும் முதலுமாக சேர்த்து சீரான இடைவெளியில் அடுத்தடுத்த படங்களை கொடுத்து வருகிறார்.

இந்த வருட ஆரம்பத்தில் ‘தாரை தப்பட்டை’ அதன்பின் வெற்றிவேல், சமுத்திரக்கனியின் ‘அப்பா’ என மூன்று படங்களில் நடித்து ரிலீஸ் செய்துவிட்ட சசிகுமார் இதோ தான் நடித்துள்ள ‘கிடாரி’ படத்தையும் இன்று ரிலீஸ் செய்துவிட்டார்.

‘வெற்றிவேல்’ படத்தில் சசிகுமாருக்கு ஜோடியாக நடித்த நிகிலா விமல் தான் இந்தப்படத்திலும் அவருக்கு ஜோடி.. தர்புகா சிவா இசையமைத்துள்ளார். பிரசாந்த் முருகேசன் என்பவர் இந்தப்படத்தை இயக்கியுள்ளார்.. அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவரும் விதமாக இந்தப்படம் உருவாக்கி இருப்பதால் படக்குழுவினர் உற்சாகத்தில் இருக்கின்றனர்.