லட்சுமி ஸ்டோர்ஸ் மூலம் மீண்டும் குஷ்பு என்ட்ரி..!

laksmi stores

நீண்ட நாட்களுக்கு பிறகு மீண்டும் சின்னத்திரைக்கு திரும்பியிருக்கிறார் குஷ்பு. சன் தொலைக்காட்சியில் புதிதாக ஒளிபரப்பாகி வரும் ‘லட்சுமி ஸ்டோர்ஸ்’ தொடரின் மூலம் நாலரை ஆண்டுகள் இடைவெளிக்குப் பிறகு, நடிகையாக ஓட ஆரம்பித்துள்ளார்.

நடிகை, அரசியல்வாதி, தயாரிப்பாளர், குடும்பத் தலைவி என பன்முகம் காட்டிவரும் குஷ்பு . சன் டிவியில் தற்போது ஒளிபரப்பாகி வரும் மெகா தொடர் தான் லட்சுமி ஸ்டோர்ஸ் . இந்த தொடரில் குஷ்பு, முரளி மோகன், சுரேஷ் சந்திரன், டெல்லி கணேஷ். சுதா ரவிச்சந்திரன், நக்ஷத்திரா நாகேஷ், சுரேஷ், ஹுசைன் அஹ்மது கான், டெல்லி குமார் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். A .ஜவஹர் இத்தொடரை இயக்குகிறார்.அவ்னி டெலி மீடியா தயாரிக்கிறது. இது ஒரு குடும்ப தொடர் .

லட்சுமி ஸ்டோர்ஸ் உரிமையாளர் மஹாலிங்கம். இவருக்கு நான்கு மகன்கள். முதன் மகன் மனைவியாக உள்ளே வருகிறார் மஹாலக்ஷ்மி (குஷ்பு). மஹாலக்ஷ்மி தனது அன்பயும், ஆதரவையும் குடும்பத்திற்கும், லட்சுமி ஸ்டோர்ஸ்க்கும் தருகிறார். பாக்கியலட்சுமி (நக்ஷத்திரா நாகேஷ்) கடையில் வேலை செய்யும் பெண் சுதா ரவிச்சந்திரன் (சகுந்தலா தேவி) வில்லி கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

லட்சுமி ஸ்டோர்ஸ் தற்போது விறுவிறுப்பான கட்டத்தை அடைந்துள்ளது. லட்சுமி ஸ்டோர்ஸில் பாக்கியலட்சுமி வேலைக்கு சேர்ந்துள்ளார். சகுந்தலாதேவி எப்படியாவது கடையை விலைக்கு வாங்க வேண்டும் என நினைக்கிறார். இதற்கிடையில் பாக்யலட்சுமிக்கும் ரவிக்கும் இடையே காதல் எப்படி ஏற்படுகிறது என்ற காட்சிகளிலும், சகுந்தலாதேவி மற்றும் லட்சுமி ஸ்டோர்ஸ் குடும்பத்திற்கு ஏற்படும் மோதல்கள் என நாடகம் விறுவிறுப்பாக செல்கிறது.

இந்த மெகா தொடர் சன் டிவியில் திங்கள் முதல் சனிக்கிழமை வரை தினமும் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகிறது.