கேரளாவில் மெர்சல் ஜெர்ஸி அறிமுகம்..!

mersal jercy

கேரளாவைப் பொறுத்தவரை அதிகப்படியான ரசிகர்களை கொண்ட தமிழ் நடிகர் என்றால் அது விஜய் தான். இது கேரளாவில் ஒவ்வொரு முறையும் விஜய் பட ரிலீஸின் போதும், பல்வேறு நிகழ்வுகளிலும் ஏற்கனவே நிரூபிக்கப்பட்டுள்ளது. இப்போது மெர்சல்’ படம் தீபாவளிக்கு ரிலீஸாக இருக்கும் நிலையில் பத்திற்கான பப்ளிசிட்டி பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.

உலகம் முழுவதும் சுமார் 3300 தியேட்டர்களில் வெளியாக இருக்கும் மெர்சல் திரைப்படம் கேரளாவில் மட்டுமே 400 தியேட்டர்களுக்கு குறையாமல் ரிலீசாகும் என தெரிகிறது. ‘மெர்சல்’ படத்தின் பப்ளிசிட்டியின் ஒரு பகுதியாக சி.சி.எல் கிரிக்கெட் போட்டி அணிகளில் ஒன்றான கேரள ஸ்ட்ரைக்கர்ஸ் அணியின் ஜெர்ஸி நேற்று அறிமுகப்படுத்தப்பட்டது.. விஜய்யின் ‘மெர்சல்’ பட பர்ஸ்ட் லுக் போஸ்டர் அந்த ஜெர்ஸியில் அச்சிடப்பட்டிருந்தது. கேரளாவில் ‘பாகுபலி-2’ படத்தை வெளியிட்ட குளோபல் மீடியா நிறுவனம்தான் ‘மெர்சல்’ படத்தின் கேரள விநியோக உரிமையை கைப்பற்றியுள்ளது.