சாவித்திரி-ஜெமினியை மீட்டெடுத்த கீர்த்தி-துல்கர்..!

தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில், 1950-60களில் உச்ச நட்சத்திரமாக விளங்கிய நடிகை சாவித்திரியின் வாழ்க்கை வரலாறை ‘மகாநதி’ என்ற பெயரிலேயே படமாக்கி வருகின்றனர்.. படத்தில் நடிகையர் திலகமாக கீர்த்தி சுரேஷ் நடிக்க, சமந்தா முக்கிய பாத்திரத்தில் நடிக்கின்றனர்.

நாக் அஷ்வின் என்பவர் இயக்கும் இந்தப்படத்தின் கதாநாயகனாக ஜெமினி கணேசன் கேரக்டரில் நடிகர் துல்கர் சல்மான் நடிக்க இருக்கிறார். இன்றைய இளம் நடிகர்களில் ஜெமினியின் ரோலுக்கு பொருத்தமானவராக இவர் இருப்பதாலும் துல்கர் சல்மானை இந்த கேரக்டருக்கு தேர்வு செய்துள்ளார்கள் என்று சொல்லப்பட்டது.

ஆனால் இன்று வெளியாகியுள்ள ‘மகாநதி’ படத்தின் புகைப்படம் ஒன்றில் துல்கர் சல்மான், கீர்த்தி சுரேஷ் இருவரையும் பார்த்தபோது, ஜெமினி-சாவித்திரி இருவரையும் நம் கண்முன்னே கொண்டு வந்து நிறுத்தியுள்ளார்கள் என்றே சொல்லவேண்டும்.. அவ்வளவு தத்ரூபமாக அவர்கள் உருவம் பொருந்தியுள்ளது..