மிகப்பெரிய அபாயத்தை சுட்டிக்காட்டு ‘கீ’..!

kee

இயக்குநர் செல்வராகவனிடம் உதவி இயக்குநராக பணியாற்றிய காலீஸ் இயக்குநராக அறிமுகமாகும் “கீ” படத்தில் ஜீவா, நிக்கி கல்ராணி ஜோடி சேர்ந்துள்ளனர். அனைகா, ஆர்.ஜே.பாலாஜி, கோவிந்த் பத்மசூர்யா, ராஜேந்திர பிரசாத், சுகாசினி, மனோபாலா, மீரா கிருஷ்ணன் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

தற்போதைய தொழில்நுட்ப உலகில் செல்போன்கள் இல்லாதவர்களே கிடையாது என்னும் அளவுக்கு செல்போனின் தேவையும், பயன்பாடும் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. வாடிக்கையாளர்களின் தேவைக்கு ஏற்ப புதுப்புது செல்போன்களும் வந்த வண்ணமாகவே இருக்கின்றன.

இவ்வாறாக செல்போன் வைத்திருப்பவர்கள் அனைவரும் பார்க்க வேண்டிய படமாக கீ உருவாகி இருக்கிறது. செல்போன் வைத்திருப்பதால் ஏற்படும் பாதிப்பை படம் பேசுகிறது. நாம் செய்யும் லைக்குகள், நாம் செய்யும் ஷேர்கள் இவற்றால் நடக்கும் பின்னணி என்ன? என்பதை பற்றி படத்தில் விவரித்திருப்பதாக இயக்குநர் காலீஸ் கூறினார்.

விஷால் சந்திரசேகர் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். அபிநந்தன் ஒளிப்பதிவு செய்துள்ளார். மலையாள சின்னத்திரை தொகுப்பாளர் மற்றும் நடிகருமான கோவிந்த் பத்மசூர்யா இந்தப்படத்தில் மிரட்டல் வில்லனாக நடித்துள்ளார். அதுமட்டுமல்ல தெலுங்கு சினிமாவின் சீனியர் நடிகர் ராஜேந்திர பிரசாத் பல வருடங்களுக்கு பிறகு மீண்டும் இந்தப்படத்தின் மூலம் தமிழுக்கு வந்துள்ளார். வரும் ஏப்ரல் 12-ஆம் தேதி படம் திரைக்கு வருகிறது.