ராபின் ஹூட் கேரக்டரில் நடிக்கும் நிவின்பாலி..!

kayamkulam kochunni

செல்வந்தர்களிடமிருந்து பணம், பொருள் போன்றவற்றை திருடி நலிந்த மக்களுக்கு வழங்கி அவர்களை மகிழ்வித்தவன் தான் ராபின் ஹூட்.. அதிகாரிகள் இவனை திருடன் என்பார்கள்.. மக்களோ இவை வள்ளல் என்பார்கள்.. கேரளாவில் எண்பதுகளில் நிஜமாகவே அப்படி ராபின் ஹூட் போலவே வாழ்ந்த திருடன் தான் காயம்குளம் கொச்சுண்ணி’..

பயங்கர கொள்ளையனான ‘அவனுடைய வாழ்க்கை வரலாற்றைத்தான் ‘காயங்குளம்’ கொச்சுண்ணி’ என்கிற பெயரில் படமாக்கவுள்ளார் இயக்குனர் ரோஷன் ஆண்ட்ரூஸ். மலையாளத்தில் மும்பை போலீஸ், ஹவ் ஓல்டு ஆர் யூ ஆகிய படங்களை தொடர்ந்து ‘36 வயதினிலே’ படத்தின் மூலம் தமிழிலும் அடியெடுத்து வைத்தவர் தான் இந்த ரோஷன் ஆண்ட்ரூஸ்.

‘காயம்குளம் கொச்சுண்ணி’ கேரக்டரில் நிவின்பாலி கதாநாயகனாக நடிக்க, கதாநாயகியாக அமலாபால் நடிக்கவுள்ளார். காயம்குளம் கொச்சுண்ணி என்பவன் கேரளா பார்டரை விட்டு தாண்டிவந்து தமிழக எல்லைப்பகுதியில் திருடுவதில் பெயர்போனவன்.. அதிலும் களரி சண்டையில் அவனை அடித்துக்கொள்ள ஆளே இல்லை என்பார்கள்.

அதனால் இந்த கேரக்டரில் நடிக்கும் நிவின்பாலியும் இந்தப்படத்திற்காக களரி சண்டை பயிற்சியெல்லாம் கற்றுக்கொண்டுள்ளாராம்.. தமிழ், மலையாளம் என இருமொழிப்படமாக இது உருவாக இருக்கிறதாம்.