‘கவண்’ ; மீண்டும் அழகு தமிழில் பெயர்சூட்டிய கே.வி.ஆனந்த்..!

kavan-title

இயக்குனர் கே.வி.ஆனந்த் படங்கள் என்றாலே ஸ்டைலிஷாக இருப்பது ஒருபக்கம் இருக்க, அதற்கு சூட்டப்பட்டும் அழகு தமிழ் பெயர்களால் இன்னொரு பக்கம் நம்மை ஆச்சர்யப்படுத்திக்கொண்டே இருக்கும்.. அயன், கோ, அநேகன், மாற்றான்’ என்கிற வரிசையில் இப்போது விஜய்சேதுபதியை வைத்து தான் இயக்கிவரும் படத்திற்கு ‘கவண்’ என பெயர் சூட்டியுள்ளார் கே.வி.ஆனந்த்.

‘கவண்’ என்பதும் தூய தமிழ்ச் சொல் தான். ஆதிகாலத்தில் மனிதன் ஆயுதங்களைப் பயன்படுத்தக் கற்றுக்கொண்டபோது, அவன் தயாரித்த முதல் விசைக்கருவி தான் இந்த ‘கவண்’. ஓர் இலக்கைக் குறி பார்த்து, கல் எறியும் கருவியாக இது பயன்பட்டது. அந்தவகையில் இந்தபடத்தின் கதாநாயகன் விஜய்சேதுபதியை ஏதோ ஓர் இலக்கை நோக்கி குறிபார்த்து எறியும் ‘கவண்’ ஆக முக்கிய வேடத்தில் இருக்கும் டி.ராஜேந்தர் இருப்பார் என்றே தெரிகிறது.

விஜய்சேதுபதியின் ஜோடியாக மீண்டும் மடோனா செபாஸ்டின் நடிக்க, விக்ராந்த், பாண்டியராஜன், நாசர், போஸ் வெங்கட், ஆகாஷ்தீப், ஜெகன் போன்றோரும் முக்கிய கதாபாத்திரங்களில் பங்களிக்கின்றனர். இளமை ததும்பும் ஐந்து பாடல்களை வழங்குகிறார் ஹிப் ஹாப் தமிழா.

கே.வி. ஆனந்தின் இயக்கத்தில் ஹிப் ஹாப் தமிழா இசையமைப்பது, இதுவே முதன்முறை. அதிலும் குறிப்பாக. டி.ராஜேந்தரும், ஹிப் ஹாப் தமிழாவும், கதாநாயகி மடோனாவும் இணைந்து பாடியிருக்கும் புது வருடப்பாடல் இனி ஒவ்வொரு நியூ இயருக்கும் தவறாமல் ஒலிக்கும் என்கிறார்கள்.