10 வருடங்கள் கழித்து ‘கவண்’ மூலம் வெள்ளித்திரை விஜயம் செய்த டி.ஆர்..!

kavan TR

தனித்தன்மை என்று சொல்வார்களே, ஏதோ ஒரு விதத்தில் அது இருப்பவர்கள் தான் (தமிழ்)சினிமாவில் தாக்குப்பிடிக்க முடியும்.. அது நடிப்போ, இசையோ, நடனமோ எதுவானாலும் சரி.. ஆனால் டி.ராஜேந்தரை பொறுத்தவரை அவரை அஷ்டாவதானி என்றே சொல்வார்கள்.. கடந்த பத்து வருடங்களாக அவர் சினிமாவில் நடிக்கவில்லை தான். ஆனால் இன்றைய இளம் ரசிகர்களிடம் பாப்புலாரிட்டி அளவில் தனது மகனையும் மிஞ்சி நம்பர் ஒன் இடத்தில் தான் இருக்கிறார்..

அப்படிப்பட்டவரை, தனது படம் தவிர வேறு யார் படத்திலும் நடிக்கமாட்டேன் என பத்து வருடங்களாக நடிப்பை விட்டு ஒதுங்கி இருந்தவரை தனது படத்தின் முக்கியமான கேரக்டரில் நடித்தே ஆக வேண்டும் என அழைத்து வந்து நினைத்ததை சாதித்தும் விட்டார் இயக்குனர் கே.வி.ஆனந்த்.. அந்த வகையில் பத்து வருடம் கழித்து, அதாவது 2007ல் வெளியான ‘வீராசாமி’ படத்திற்கு அடுத்து ‘கவண்’ படம் டி.ஆருக்கு தமிழ்சினிமாவில் மீண்டும் ஒரு புதிய பாதையை போட்டுத்தரும் என்பது உறுதி.