“அடிச்சா திருப்பி அடிக்காத மாதிரி ஆள் வேணும்” ; கே.வி.ஆனந்த் போட்ட கண்டிஷன்..!

Kavan-67

டெக்னிக்கலாகவும் கதை ரீதியாகவும் பிரமாண்டம் காட்டி மிரட்டும் மிகச்சில இயக்குனர்களில் கே.வி.ஆனந்தும் ஒருவர்.. தற்போது விஜய்சேதுபதி, மடோனாவை வைத்து ‘கவண்’ என்கிற படத்தை இயக்கியுள்ளார்.. திரையுலகில் மிகப்பெரிய ஆச்சர்யமாக இதுவரை வேறு யார் டைரக்சனிலும் நடிக்காத டி.ராஜேந்தரை இந்தப்படத்தில் நீண்ட நாட்கள் கழித்து முக்கிய கேரக்டரில் நடிக்க வைத்துள்ளார்..

வரும் மார்ச்-31ஆம் தேதி இந்தப்படம் வெளியாகவுள்ள நிலையில் ‘கவண்’ படக்குழுவினருடன் பத்திரிகையாளர்களை சந்தித்தார் இயக்குனர் கே.வி.ஆனந்த். அப்போது இந்தப்படத்தில் விஜய்சேதுபதி கதாநாயகனாக உள்ளே வந்தது, டி.ராஜேந்தர் நடிக்க ஒப்புக்கொண்டது எப்படி என சில சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்துகொண்டார்.

“இதே கதையை வேறொரு ஹீரோவிடம் சொன்னபோது எனக்கு அவளோதான் பைட்டா என்றார். இன்னொருவர் தூங்கியே விட்டார். ஆனால் விஜயசேதுபதி, கதைசொல்லி முடித்ததும் கொஞ்சம் நேரம் பேசாமல் இருந்தவர், கல்பனா என்கிற பெண்ணின் கேரக்டரில் என்ட்ரியில் சில காட்சிகளை எக்ஸ்ட்ராவாக வைக்கலாமே என்றார். எனக்கு இன்னும் காட்சி வேண்டும் என்று கேட்காமல் படத்தில் எட்டாவது ஒன்பதாவது வரும் கேரக்டருக்கு முக்கியத்துவம் கொடுக்க சொல்கிறார். அதை ஞாபகம் வச்சி கேட்கிறார். இந்தமாதிரி ஒரு ஹீரோ தமிழ் இன்டஸ்ட்ரியில் இல்லை. சுயநலமாகத்தான் இருப்பார்கள். அந்த சமயம் மூன்று படங்களில் பண்ணுவதாக இருந்தவர் அந்த படங்களை தூக்கி போட்டு விட்டு இந்த படத்தில் நடிக்க வந்தார் விஜயசேதுபதி” என்று விஜய்சேதுபதியை தன படத்தின் ஹீரோவாக தேர்ந்தெடுத்த காரணத்தை கூறினார் கே.வி.ஆனந்த்..

அதேபோல, “படத்தில் ஒரு கேரக்டர் ஓப்பனாக மனதில் தோன்றியதை பேசனும். ஒரு தப்பு நடந்தா அதைப்பத்தியும் ஓப்பனாக பேசனும். கட்சோட பேசனும். இது யார் பண்ணினா நல்லாயிருக்கும் என்கிறபோது டிஆர் சார்தான் ஞாபகத்துல வந்தாங்க. அவரிடம் திருப்பி திருப்பி கேட்ட காரணம் இந்த கேரக்டர் அவர் பண்ணினாதான் நல்லாயிருக்கும் என்பதினால்தான். அவர் பண்ணவில்லை என்றால் ஏதோ ஒன்று இழந்தது போல் இருக்கும். படத்துல பெரிய பலம் அவர்தான்..” என டி.ஆறுக்கு புகழாரமும் சூட்டினார் கே.வி.ஆனந்த்.