மார்ச்-17ல் கட்டப்பா எங்கிருக்கிறார் என தெரியவரும்..!

kattappava kanom 1

தற்போது மணி செய்யோன் என்பவர் இயக்கத்தில் உருவாகிவரும் ‘கட்டப்பாவ காணோம்’ என்கிற படத்தில் சிபிராஜ் நடித்து வருகிறார். நாடறிந்த ‘கட்டப்பா’ பற்றிய விளக்கத்தை நாம் கொடுக்கவேண்டியது இல்லை என்றாலும், இந்தப்படம் ‘கட்டப்பா’ என்கிற வாஸ்து மீன் என்கிற புதிய கதைக்களத்தில் உருவாகியுள்ளது.

சிபிராஜுக்கு ஜோயியாக ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்க, முக்கிய வேடங்களில் சாந்தினி, காளி வெங்கட், யோகிபாபு, மைம் கோபி, லிவிங்ஸ்டன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கின்றனர். இயக்குனர் நலன் குமாரசாமி இந்தப்படத்தில் சிறப்பு கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.

இந்தப்படத்தை தயாரிக்கும் ‘வின்ட் சிம்ஸ் மீடியா என்டர்டெயின்மென்ட் நிறுவனம், இந்தப்படத்தை தயாரிப்பதன் மூலம் தான் தமிழ் திரையுலகில் அடியெடுத்து வைக்கிறது காமெடி கம் கமர்ஷியல் படமாக தயாராகியுள்ள இந்த ‘கட்டப்பாவ காணோம்’, வரும் மார்ச்-17ஆம் தேதி திரைக்கு வருகிறது. ஆக, மார்ச்-17ல் கட்டப்பா எங்கிருக்கிறார் என்பது நிச்சயம் தெரியவரும்.