லிங்குசாமியின் கவிதைகள் ‘கற்றுக் கொடுக்கிறது மரம்’ நூலாக வெளியீடு


இயக்குநர் லிங்குசாமியின் கவிதைகளை முன்வைத்து கவிஞர் ஜெயபாஸ்கரன் எழுதிய ‘கற்றுக் கொடுக்கிறது மரம் ‘ என்ற நூல்வெளியீடு மதுரையில் சில தினங்களுக்கு முன் புதிதாகத் திறக்கப்பட்ட K Four Apartment & Hotels இல் உள்ள மகாகவி அரங்கில் பேராசிரியர் கு.ஞானசம்பந்தன் தலைமையில் நடைபெற்றது. கவிஞர் மனுஷ்யபுத்திரன் நூலை வெளியிட மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் எழுத்தாளர் சு.வெங்கடேசன் பெற்றுக்கொண்டார். தொழில் அதிபர் சின்னமருது தீனதயாள பாண்டியன், கவிஞர் அறிவுமதி, இயக்குநர்கள் பாலாஜி சக்திவேல், பிருந்தா சாரதி ஆகியோர் விழாவில் கலந்துகொண்டு வாழ்த்துரை வழங்கினர். பதிப்பாளர் மு.வேடியப்பன் வரவேற்புரையும் நூலாசிரியர் ஜெயபாஸ்கரன் ஏற்புரையும் வழங்கினர்.