கத்திக்கு ‘அக்கரை’ யில் 2௦௦ ஸ்கிரீன் தயார்..!

கடந்த பொங்கல் பண்டிகையின்போது ஜில்லா, வீரம் என இரண்டு படங்களும் கேரளாவில் ரிலீஸ் ஆகப்போவதை உணர்ந்துதான் அந்த வாரத்தில் வேறு எந்த மலையாளப் படங்களும் வெளியாகவில்லை. சொல்லப்போனால் விநியோகஸ்தர்களே அந்த இரண்டு படம் மட்டும் போதும் என்று சொல்லிவிட்டார்கள்.

காரணம் விஜய், அஜித்திற்கு கேரளாவில் ரசிகர்கள் அதிகம். அதேபோல இப்போது விஜய் நடித்துள்ள ‘கத்தி’யை தீபாவளிக்கு கேரளாவில் மிகப்பெரிய அளவில் ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ள கேரளாவின் மிகப்பெரிய விநியோகஸ்தரான தமீன், இதற்காக கிட்டத்தட்ட 2௦௦ தியேட்டர்களை ஒப்பந்தம் செய்திருக்கிறாராம்.