பாண்டிராஜின் கணிப்பை பொய்யாக்கிய விஷால்..!

kathakali
பாண்டிராஜ்-விஷால் என்கிற புதிய காம்பினேஷனில் பொங்கல் வெளியீடாக வர இருக்கிறது ‘கதகளி’.. கதாநாயகியாக கேத்தரின் தெரசா நடிக்கிறார். இந்தப்படத்தை பார்த்த சென்சார் அதிகாரிகள் படத்திற்கு ‘யு’ சான்றிதழ் அளித்துள்ளனர். முதல்முதலாக விஷால் இருக்கும் தைரியத்தில் ஆக்சன் ஏரியாவில் கால் வைத்துள்ளார் இயக்குனர் பாண்டிராஜ்.

இந்தப்படத்திற்காக விஷாலை சந்தித்து இரண்டு விதமான கதைகளை சொன்னாராம் பாண்டிராஜ்.. ஒன்று பக்கா ஆக்சன் கதை.. இரண்டாவது லைட்டான ஆக்சன் கதை.. இரண்டையும் கேட்ட விஷால் இரண்டாவதாக இருக்கும் கதையையே பண்ணலாமே.. அதுதான் ஒரு நாவல் படித்த பீலிங்கை தருகிறது என்று சொல்ல பாண்டிராஜுக்கு மிகுந்த ஷாக்.

காரணம் இந்த இரண்டு கதைகளையும் இயக்குனர்கள் சுசீந்திரன், திரு ஆகியோரிடம் ஏற்கனவே பாண்டிராஜ் சொன்னபோது, அவர்கள் இருவருமே, இதை விஷாலிடம் சொன்னால் அவர் முதல் கதையைத்தான் தேர்ந்தெடுப்பார் என சொல்லியிருந்தார்களாம். பாண்டிராஜும் அப்படித்தான் நினைத்தாராம்.

ஆனால் அதற்கு நேர்மாறாக இப்போது உருவாகி இருக்கும் ‘கதகளி’ படத்தை விஷால் தேர்ந்தெடுத்து பாண்டிராஜின் கணிப்பை பொய்யாக்கிவிட்டார். ‘கதகளி’ விஷாலுக்கு இன்னொரு ‘பாண்டியநாடு ஆக இருக்கும் என்பது ட்ரெய்லரை பார்த்தாலே தெரிகிறது.’