கருப்பு ராஜா வெள்ளைராஜா’ ; தமிழில் ஒரு ‘ஷோலே’

karuppu-raja-vellai-raja

நடிகர்சங்க கட்டடம் கட்டும் நிதிக்காக விஷால்-கார்த்தி இருவரும் சேர்ந்து பத்து கோடி ரூபாய் தருவதாக கூறினார்கள் இல்லையா..? அதன் முதல் படியை தாங்கள் நடிக்கும் ‘கருப்பு ராஜா வெள்ளை ராஜா’ படம் மூலம் எடுத்து வைத்துள்ளார்கள்.. இந்தப்படத்தின் மூலம் வரும் லாபத்தில் அவர்கள் சொன்ன தொகை அந்த கட்டட நிதிக்கு போகும் என்று என விஷால் கூறியுள்ளார்..

‘வெடி படத்திற்குப்பின் மீண்டும் இந்தப்படத்தை இயக்குவதன் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனர் தொப்பியை எடுத்து அணிந்துள்ளார் பிரபுதேவா. மறைந்த இயக்குனர் சுபாஷ் தான் இந்தப்படத்தின் கதையை எழுதியுள்ளார். விஷாலுக்கு கார்த்திக்கும் சம முக்கியத்துவம் கொண்ட கதாபாத்திரங்களை உருவாக்கியுள்ளாராம்..

பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய விஷால், “கிட்டத்தட்ட இந்தப்படத்தை தமிழ் சினிமாவுக்கு ஒரு ‘ஷோலே’ மாதிரி இயக்கவுள்ளார் பிரபுதேவா மாஸ்டர்.. ‘கருப்பு ராஜா வெள்ளை ராஜா’ என்பது எங்கள் கலருக்காக வைத்த டைட்டில் அல்ல.. அஹிம்சைக்கும் வன்முறைக்கும் இடையே நடக்கும் போராட்டத்தை குறிக்கும் விதமாகத்தான் இந்த பொருத்தமான டைட்டில் வைக்கப்பட்டுள்ளது” என்றார்..

இந்தப்படம் பற்றி கார்த்தி பேசும்போது, “டபுள் ஹீரோ சப்ஜெக்டை உருவாக்குவதும் அதில் நடிப்பதும் சவாலான விஷயங்கள்.. ஆனால் இந்தப்படத்தை பொறுத்தவரை அதை தனது அற்புதமான கதை மூலம் சாத்தியப்படுத்தி தந்துவிட்டு சென்றிருக்கிறார் மறைந்த இயக்குனர் சுபாஷ்.. எனது கேரக்டரில் ஹ்யூமரையும் விஷாலின் கேரக்டரில் சீரியசையும் வைத்து இரண்டு கேரக்டர்களையும் பேலன்ஸ் பண்ணியிருக்கிறார் சுபாஷ்” என சுபாஷின் கதையமைப்பை சிலாகித்து பேசினார் கார்த்தி.

இந்தப்படத்தில் இரண்டு ஹீரோக்கள் இருந்தாலும் ஒரே கதாநாயகி மட்டும் தான்.. தற்போது வனமகன் படத்தில் அறிமுகமாகி இருக்கும் சாயிஷா சைகல் தான் இந்தப்படத்தின் நாயகி.. இவர் நடித்த ஒரு டான்ஸ் காட்சியை விஷால்-கார்த்தி இருவருக்கும் போட்டுக்காட்டினாராம் பிரபுதேவா..

அதை பார்த்து மிரண்டுவிட்டார்களாம் இருவரும்.. விஷால் பேசியதை வைத்து பார்த்தால் அனேகமாக இந்தப்படத்தில் சாயிஷா கார்த்திக்குத்தான் ஜோடியாக நடிப்பார் என்றே தெரிகிறது, அதற்கேற்ற மாதிரி “டான்ஸ் ஏரியாதான் நமக்கு கொஞ்சம் வீக்.. இந்தப்படத்தில் பிரபுதேவா மாஸ்டர் என்னை பெண்டு நிமிர்த்தி விடுவார் என்றுதான் தோன்றுகிறது.. அதேசமயம் அவர் இருப்பதால் டான்ஸையும் ஒருகை பார்த்து விடும் நம்பிக்கை இருக்கிறது” என கூறியுள்ளார் கார்த்தி..