‘கருப்பன்’ படத்திற்காக மீண்டும் இணைந்த ‘றெக்க’ ஜோடி..!

lakshmi-menon

‘ரேணிகுண்டா’ டைரக்டர் பன்னீர்செல்வம் இயக்கத்தில் விஜய்சேதுபதி நடிக்க இருக்கிறார் என்பது ஏற்கனவே உறுதியாகிவிட்ட செய்திதான்.. ஆனால் அந்தப்படத்தின் டைட்டிலும் படத்தின் கதாநாயகி யார் என்பதும் உறுதிசெய்யப்படாமலேயே இருந்தன. கதாநாயகி கூட ஆண்டவன் கட்டளையில் விஜய்சேதுபதிக்கு ஜோடியாக நடித்த ரித்திகா சிங் தான் நடிக்கிறார் என சொல்லப்பட்டு வந்தது..

இந்தநிலையில் படத்திற்கு ‘கருப்பன்’ என பெயர் வைத்துள்ளார்கள். படத்தில் விஜய்சேதுபதி மாடுபிடி வீரனாக வருகிறாராம். விஜய்சேதுபதிக்கு ஜோடியாக நடிக்க, ஏற்கனவே அவருடன் ‘றெக்க’ படத்தில் நடித்த லட்சுமி மேனனுக்கே மீண்டும் வாய்ப்பு கிடைத்துள்ளது.. மதுரைப்பெண் கேரக்டருக்கு ரித்திகா செட்டாக மாட்டார் என்பதாலும் ஏற்கனவே லட்சுமி மேனன் நான்கைந்து படங்களில் மதுரை பொண்ணாக நடித்துள்ளார் என்பதாலும் தான் இந்த மாற்றமாம்..