கருணாஸிடம் கோரிக்கை வைத்த விஷால்..!

karunas - vishal
இந்தமுறை நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் வழக்கம்போல் சினிமா நட்சத்திரங்கள் சிலர் போட்டியிட்டனர். இதில் அதிமுக சார்பாக நின்ற கருணாஸ் வெற்றிபெற்று ஆச்சர்யப்படுத்த, அதே கட்சி சார்பாக போட்டியிட்ட சரத்குமாரோ தோல்வியை தழுவி அதிர்ச்சியை அளித்தார்.. இவர்கள் இருவரும் நடிகர்சங்க தேர்தலில் எதிரும் புதிருமாக நின்றவர்கள் என்பது கவனிக்கத்தகது.

இந்நிலையில் வெற்றிபெற்ற கருணாசுக்கு நடிகர் விஷால் வாழ்த்து தெரிவித்துள்ளதோடு கோரிக்கை ஒன்றையும் வைத்துள்ளார். அதில், “இது முதல் தேர்தல்.. ஆனால் நீங்கள் இன்னும் நிறைய தூரம் போகவேண்டும்.. உங்கள் தொகுதிக்கு நீங்கள் நல்ல விஷயங்களை செய்யவேண்டும்” என குறிப்பிட்டுள்ளார் விஷால்.