ஷங்கர் பாணியில் கருணாஸ் பட கிளைமாக்ஸ்..!


கருணாஸ் பாலாவின் ‘நந்தா’ படம் மூலமாக அறிமுகமானது ஒரு சிறப்பென்றால் அவரை பட்டி தொட்டியெங்கும் அறிமுகப்படுத்தியது அந்தப்படத்தில் அவர் ஏற்று நடித்த ‘லொடுக்கு பாண்டி’ கேரக்டர் தான்.. இப்போதுதான் ஒரு படத்தில் ஹிட்டாகும் கேரக்டர் பெயரையே இன்னொரு படத்திற்கு தலைப்பாக வைத்து விடுகிறார்களே..

அந்தவகையில் தயாராகி வரும் ‘லொடுக்கு பாண்டி’ படத்தில் கருணாஸ் தான் கதையின் நாயகனாக நடிக்கிறார். இந்தப்படத்தை அறிமுக இயக்குனர் ரஜனிஷ் என்பவர் இயக்குகிறார். சமீபத்தில் கருணாஸ் நடித்த உணர்ச்சிகரமான க்ளைமாக்ஸ் காட்சியை 2௦ லட்ச ரூபாய் மதிப்புள்ள செட் ஒன்றை தமிழக-கர்நாடக எல்லையில் அமைத்து, ஷங்கர் படங்களை போல 13 கேமராக்களை வைத்து படமாக்கியிருக்கிறார்களாம்..