பிப்-24ஆம் தேதி ‘கரு’ ஆடியோ ரிலீஸ்..!

karu audio launch

இயக்குநர் விஜய் இயக்கத்தில் சாய்பல்லவி கதாநாயகியாக நடிக்கும் படம் கரு. நாயகிக்கு முக்கியத்துவம் கொண்டுள்ள இப்படம் தற்போது சமூகத்தில் பெண்களுக்கு நடந்து கொண்டிருக்கும் பிரச்னையை கருத்தாக கொண்டு உருவாகி உள்ளது.

இதுமட்டுமின்றி இந்த படத்தில் பல காட்சிகளில் மிக தத்ரூபமாகவும், உணர்ச்சிபூர்வமாகவும் தான் நடிப்பை வெளிப்படுத்திய சாய்பல்லவி பெரிய அளவில் ஸ்கோர் செய்துள்ளாராம்.

லைக்கா நிறுவனம் தயாரிப்பில் உருவாகியுள்ள இப்படத்தில் தெலுங்கு நடிகர் நாகா சவுர்யா கதாநாயகனாக நடிக்கிறார். இந்நிலையில் கரு என்ற தலைப்பில் படத்தை வெளியிட விதிக்கப்பட்ட இடைக்கால தடையை நீக்க அனுமதி அளித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதனை தொடர்ந்து வரும் பிப்-24ஆம் தேதி இந்தப்படத்தின் இசைவெளியீட்டு விழா நடைபெற இருக்கிறது.