மார்ச்-8ல் துவங்குகிறது கார்த்தியின் புதிய படம்…!

karthi 17

கார்த்தி தற்போது பாண்டிராஜின் டைரக்சனில் ‘கடைக்குட்டி சிங்கம்’ என்கிற படத்தில் நடித்து வருகிறார். இதை தொடர்ந்து அவர் நடிக்க இருக்கும் புதிய படத்தை ரஜத் ரவிசங்கர் என்பவர் இயக்குகிறார். இவர் பிரபல இந்தி இயக்குநர் அனுராக் காஷ்யப், ‘எங்கேயும் எப்போதும்’ இயக்குநர் சரவணன், ஆர்..கண்ணன் இவர்களுடன் இணை இயக்குனராக பணிபுரிந்தவர்.

மாபெரும் வெற்றிபெற்ற ‘தீரன் அதிகாரம் ஒன்று’ படத்தை தொடர்ந்து கார்த்தி, ரகுல் பிரீத்சிங் ஜோடி மீண்டும் இந்தப்படத்தில் இணைகிறார்கள் .

மேலும் பிரகாஷ்ராஜ், ரம்யா கிருஷ்ணன், ஆர்ஜே விக்னேஷ், அம்ருதா, ரேணுகா மற்றும் பலர் இந்தப்படத்தில் நடிக்கிறார்கள்.. அதைவிட முக்கிய அம்சமாக இவர்களுடன் முக்கிய வேடத்தில் நவரச நாயகன் கார்த்திக் நடிக்கிறார்.

ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கும் இந்தப்படத்தை, ரிலையன்ஸ் எண்டெர்டைன்மென்ட் வழங்க, ‘சிங்கம்-2’ படத்தை தயாரித்த பிரின்ஸ் பிக்சர்ஸ் எஸ்.லஷ்மண்குமார் தயாரிக்கிறார் .

இந்தப்படத்தின் படப்பிடிப்பு இம்மாதம் 8ம் தேதி சென்னையில் ஆரம்பமாகிறது. இதை தொடர்ந்து யுரோப் நாட்டில் 15 நாட்களும், ஹைதராபாத், மும்பை, இமயமலை பகுதிகளிலும் இந்தப்படம் உருவாக இருக்கிறது.