சிரஞ்சீவியை சந்திக்கவிருக்கும் கார்த்திக் சுப்புராஜ்..!

நிச்சயமாக அரசியலில் சேருவதற்காகவோ, அல்லது சிரஞ்சீவிக்கு கதை சொல்வதற்காக கார்த்திக் சுப்புராஜ், சிரஞ்சீவியை சந்திக்கப்போவதில்லை என்பதை முதலில் தெரிவித்துக்கொண்டு, வேறு என்ன காரணம் என சொல்வதற்கு முன் ஒரு விருது பற்றிய அறிமுகம் ஒன்றை பார்த்து விடுவோமா..?

1992ஆம் ஆண்டில்   நடந்த ஒரு விபத்தில் உயிர் நீத்த இளம் இயக்குனர் கொல்லப்புடி ஸ்ரீநிவாஸ்  என்பவரின் நினைவாக, 1998 ஆம் ஆண்டு முதல், ஒவ்வொரு வருடமும் மார்ச் மாதம் 17ஆம் தேதி அவரது பெயரில் விருது அறிவிக்கப்பட்டு ஆகஸ்ட்  மாதம் 12 ஆம் தேதி வழங்கப்படுகிறது..

அந்தவகையில் இந்தவருடம் ‘Q’ என்ற படத்துக்காக 18-வது கொல்லப்புடி தேசிய விருது வெல்கிறார் புதிய இயக்குனர் சஞ்சீவ் குப்தா. பழம் பெரும் இயக்குனர் சிங்கீதம் ஸ்ரீநிவாஸ் ராவ், இயக்குனர்  வசந்த், நடிகை ரோகினி ஆகியோர் சிறப்பு தேர்வுக் குழுவினர்களாக இருந்து தேர்ந்தெடுத்த படம் தான் இந்த ‘Q’.

இப்போது கார்த்திக் சுப்புராஜ் விஷயத்துக்கு வருவோம். ஒவ்வொரு வருடமும்  ஆகஸ்ட் மாதம் 12 ஆம் தேதி  ஒரு லட்சத்து ஐம்பது ஆயிரம் பண முடிப்புடன் வழங்கப்படும் இந்த விருது சென்னை மியூசிக் அகாடமி வளாகத்தில் நடைபெறுகிறது.

இந்த வருடம் இந்த விழாவில் கலந்துகொண்டு சிறப்பிக்க உள்ளவர்கலீல் முக்கியமானவர் தெலுங்கு சூப்பர்ஸ்டார் சிரஞ்சீவி. அவருடன் பிரபல இயக்குனர் ஃ பாராகான் மற்றும் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ், நடிகர் சித்தார்த் ஆகியோரும் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டு சிறப்புரை ஆற்ற இருக்கிறார்கள்.

Attachments