சூப்பர்ஸ்டார் படத்தை இயக்குகிறார் கார்த்திக் சுப்பராஜ்..!

rajini karthik subburaj movie announced

ரஜினி நடித்த இரண்டு படங்கள் அடுத்தடுத்து ரிலீஸுக்கு தயாராகி வருகின்றன. இதில் காலா படம் வரும் ஏப்-27ஆம் தேதி வெளியாக இருக்கிறது. அடுத்தததாக 2.O படம் இந்த வருடத்திற்குள் வெளியாக இருக்கிறது.

இந்த நிலையில் அரசியல் களத்தில் பரபரப்பாகிவிட்ட ரஜினி அடுத்து படங்களில் நடிப்பாரா, இல்லையா, அப்படி நடித்தால் யார் அந்தப்படத்தை டைரக்ட் பண்ணுவார் என நாலா திசையிலும் இருந்து கேள்விகள் எழுந்த வண்ணம் இருந்தன.

இந்த நிலையில் தான் சூப்பர்ஸ்டாரின் அடுத்த படத்தை இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் இயக்குகிறார் என அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்று வெளியாகியுள்ளது. இந்தப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க இருக்கிறது. எந்திரன் படத்தை தொடர்ந்து ரஜினியுடன் சன் பிக்சர்ஸ் இணையும் இரண்டாவது படம் இது.

ரஜினி படத்தை இயக்கும் வாய்ப்பு குறித்து, கார்த்திக் சுப்பராஜ் கூறும்போது, “சந்தோஷ மிகுதியால் என்ன சொல்வதென்றே தெரியவில்லை.. ஆனால் நான் கனவு கண்ட தருணம் இன்று நனவாக மாறியுள்ளது” என கூறியுள்ளார்.