பாட்டி(கள்) இட்லி சுட்ட கதையை அம்பலப்படுத்தினார் கார்த்தி..!

idly

பாட்டி வடைசுட்ட கதை தெரியும்.. அது என்ன இட்லி சுட்ட கதை..? அதை சொல்லத்தான் ஒரு படத்தையே எடுத்து அதற்கு ‘இட்லி’ என டைட்டிலும் வைத்துள்ளார் இயக்குனர் வித்யாதரன். பத்து வருடங்களுக்கு முன் சரத்குமாரை வைத்து வைத்தீஸ்வரன் படத்தை இயக்கியவர் தான் இந்த வித்யாதரன்… இந்த ‘இட்லி’ படத்தில் சரண்யா பொன்வண்ணன், கோவை சரளா, கல்பனா ஆகிய மூவரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

இவர்களோடு மனோபாலா, தேவதர்ஷினி, வெண்ணிறடை மூர்த்தி மற்றும் பலர் நடித்துள்ளனர். வயதான மூன்று பாட்டிகள்தான் ஹீரோ. அவர்கள் எதிர்கொள்ளும் சம்பவங்கள் தான் கதை. சரண்யா பொன்வண்ணன், கோவை சரளா, கல்பனா ஆகிய மூவரும் தான் அந்த பாட்டிகள். மற்றபடி படத்தில் பாடல்கள், ஆக்சன் காட்சிகள் என்று எதுவும் கிடையாது. இதுதான் இட்லி படத்தின் ஸ்பெஷல்.

காரணம் இது அனைவரையும் சிரிக்க வைக்கும் சிந்திக்க வைக்கும் படமாக இருக்கும். திட்டமிட்டப்படி 29 நாட்களில் இதன் படப்பிடிப்பை முடித்துள்ளார் இயக்குநர் வித்யாதரன். அப்பு மூவீஸ் அப்பாஸ் தூயவன் தயாரித்துள்ள இத்திரைப்படம் வருகிற நவம்பர் மாதம் வெளியாகவுள்ளது. இதன் டீசரை நடிகர் கார்த்தி வெளியிட்டார்.