கார்த்தி படத்தை இயக்க தயாரான பாண்டியராஜ்..!

karthi - pandiraj

‘பசங்க-2’ படத்தில் சூர்யாவை வைத்து இயக்கிய இயக்குனர் பாண்டிராஜ், அடுத்ததாக கார்த்தி நடிக்கும் படம் ஒன்றை இயக்கவுள்ளார்.. இதற்கான கதையை கேட்டு ஒகே செய்துவிட்டார் கார்த்தி.. இந்தப்படத்தை சூர்யாவுக்கு சொந்தமான 2டி என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிக்க இருக்கிறது..

இந்த தகவலை சமீபத்தில் நடைபெற்ற ‘செம’ படத்தின் இசைவெளியீட்டு விழாவில் கலந்துகொண்டு பேசிய 2டி நிறுவனத்தின் ராஜசேகர் பாண்டியன் மேடையிலேயே அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். கார்த்தி தற்போது நடித்துவரும் தீரன் அத்தியாயம் ஒன்று மாறும் கருப்புராஜா வெள்ளைராஜா ஆகிய படங்களை முடித்துவிட்டு இந்தப்படத்தின் படப்பிடிப்பில் கலந்துகொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.