கார்த்திக்கு ஜோடியாக நடிக்கும் கீதா கோவிந்தம் நாயகி

karthi 19

சிவகார்த்திகேயனை வைத்து ரெமோ என்கிற ரொமான்ஸ் படத்தை கொடுத்தவர் பாக்யராஜ் கண்ணன். இவர் அடுத்ததாக கார்த்தி நடிக்கும் 19வது படத்தை இயக்க உள்ளார். இந்த படத்தில் கதாநாயகியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார். இவர் கடந்த வருடம் தெலுங்கில் வெளியாகி சூப்பர்ஹிட்டான கீதா கோவிந்தம் படத்தில் விஜய் தேவரகொண்டா ஜோடியாக நடித்து ரசிகர்களை கவர்ந்தவர்.

விவேக்-மெர்வின் இந்த படத்திற்கு இசையமைக்க, சத்யன் சூரியன் ஒளிப்பதிவு செய்கிறார். ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் சார்பாக எஸ்.ஆர்.பிரபு மற்றும் எஸ்.ஆர்.பிரகாஷ்பாபு இந்தப்படத்தை தயாரிக்கின்றனர். கார்த்தி தற்போது நடித்துவரும் அவரது 18வது படத்தை மாநகரம் புகழ் லோகேஷ் கனகராஜ் இயக்கி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.