“என் கேரக்டரை என்னால் புரிஞ்சுக்கவே முடியலை” ; கார்த்தி..!

karthi

மணிரத்னம் வைத்த பரீட்சையில் கார்த்தி எழுதிய தேர்வுக்கு நாளை ரிசல்ட் வெளியாகப்போகிறது. ஆம்.. மணிரத்னம் இயக்கத்தில் கார்த்தி நடித்துள்ள ‘காற்று வெளியிடை’ படம் நாளை ரிலீஸாகிறது. வழக்கமான கதாபாத்திரங்களில் இருந்து விலகி இந்தப்படதத்தில் ஒரு பைலட்டாக நடித்துள்ளார் கார்த்தி..

“மணிரத்னம் சார் கூப்பிட்டு இப்படி ஒரு கேரக்டர் தான் பண்ண போறன்னு சொன்னதுமே பயம் வந்துருச்சு.. சார் இதுக்கு நான் செட்டாவனாநு கேட்டேன்.. ஸ்கிரிப்ட்டை கையில கொடுத்து படின்னு அனுப்பிட்டார்.. படிச்சு பார்த்தாலும் படத்துல என் கேரக்டர் என்னான்னு என்னால புரிஞ்சுக்கவே முடியல.. அதுக்கப்புறம் மீசையை எடுத்துட்டு அந்த யூனிபார்ம் போட்டுட்டு கண்ணாடில பார்த்தேன்.. ஒரு சாயல்ல அண்ணா (சூர்யா) மாதிரி கூட தெரிஞ்சது.. ஒகே.. நாம பண்ணிரலாம்னு கொஞ்சம் கான்பிடன்ஸ் வந்துச்சு..

அப்பாவும் அந்த கேரக்டர் பத்தின குழப்பம் விலகல.. மணி சார் கூட ஸ்கிரிப்ட் டிஸ்கஷன்ல உக்கார்ந்தப்போ, நான் ஒன்னு கேட்கறேன்.. மணி சார் வேற ஒன்னு சொல்றார்.. அதுக்கப்புறமா சில பைலட்டுகளை சந்திச்சேன்.. உண்மையிலேயே நிஜமான பயம் அவங்களை சந்திச்ச பிறகுதான் ஏற்பட்டுச்சு.. அவங்க உலகமே வேற.. நாட்டுக்காக, மக்களுக்காக எவ்வளவு தியாகம் பண்றாங்கன்னு தெரிய வந்ததும், இதை நாம சரியா பண்ணிருவோமான்னு திரும்பவும் ஒரு பயம்.. ஆனால் ரெண்டாம் நாள் ஷூட்டிங்ல மணி சார் நான் பண்ணின ஒரு விஷயத்தை ஒகே பண்ணினார். அப்பத்தான், ஒகே நாம் சரியான ரூட்ல தான் போக்கிட்டு இருக்கோம்னு முழு நம்பிக்கை வந்துச்சு..

மணி சார் அப்படித்தான்.. கார்த்தினா இந்த ரோல் கொடுத்தா பண்ணிட்டு போயிருவான்னு மக்கள் ரெகுலரா நெனைச்சிருக்கிற ஒரு விஷயத்தை உடைச்சு, என்னால பண்ண முடியுமான்னு நானே யோசிக்கிற ரோல்ல என்னை உக்கார வச்சு புதுசா மாத்தி, அதை ஜனங்களையும் ஏத்துக்க வைப்பாரு.. அது தான் மணி சார். இந்த கேரக்டரை எனக்கு கொடுத்ததுக்கு அவருக்கு நான் தான் நன்றி சொல்லணும்” என தான் பைலட் ஆனா கதையை சொல்கிறார் கார்த்தி..

நாளை வெளியாகும் இந்தப்படத்திற்குள் மணிரதனமும் கார்த்தியும் இணைந்து இன்னும் என்னென்ன ஆச்சர்யங்களை பரிசளிக்கப்போகிறார்களோ..?