வருடத்திற்கு ஒரு கிராமத்து படத்திலாவது நடிக்க விரும்பும் கார்த்தி..!

karthi
கொம்பன் படத்தை தொடர்ந்து கார்த்தி நடித்துள்ள தோழா’ திரைப்படம் நாளை வெளியாக இருக்கிறது.. இன்னொரு பக்கம் காச்மோரா’ என்கிற படத்தில் நடித்து வருகிறார் கார்த்தி. இவை இரண்டுமே கார்த்தியை ஸ்டைலிஷாக காட்டும் சிட்டியை பின்னணியாக கொண்ட படங்கள் ஆகும்.

ஆனால் கார்த்திக்கு கிராமத்து படங்களில் நடிப்பது என்றால் தான் ரொம்ப இஷ்டமாம்.. வருடத்திற்கு ஒரு படமாவது கிராமத்து பின்னணியில் நடிக்கவேண்டும் என விரும்புகிறார் கார்த்தி. இதற்கு இவர் சொல்லும் காரணம் என்ன தெரியுமா..?

கிராமத்து படங்களில் நடிக்கும்போதுதான் தலை சீவ தேவையில்லையாம்,.. அடிக்கடி உடைமாற்ற தேவையில்லையாம்.. இஷ்டம் போல ப்ரீயாக இருக்கலாம் என்கிறார் மனிதர். ஆனாலும் பருத்திவீரன், கொம்பன் என கிராமத்து கதைகளில் கார்த்தி பொருந்துவது போல மற்ற நடிகர்கள் கூட அவ்வளவு பொருந்துவதில்லை என்பதே உண்மை.