கார்த்தி-ஜோதிகாவின் தம்பி டீசர் வெளியானது

மலையாளத்தில் த்ரிஷ்யம் தமிழில் பாபநாசம் பழங்களைக் கொடுத்து தனக்கென ஒரு தனி பாணியை உருவாக்கிக் கொண்டவர் ஜீத்து ஜோசப்.. இவர் படங்களுக்கு என ரசிகர்களிடம் தனி வரவேற்பு இருக்கிறது.. பாபநாசம் படத்தை தொடர்ந்து தற்போது மீண்டும் தமிழில் கார்த்தி கதாநாயகனாக நடிக்கும் படத்தை இயக்கியுள்ளார் ஜீத்து ஜோசப்..

தமிழில் இந்த புதிய கூட்டணி இணைகிறார்கள் என்ற செய்தி வெளியானதுமே படத்தின் எதிர்பார்ப்பு இரண்டு மடங்காகி விட்டது. இந்த படத்தில் ஜோதிகா மிக முக்கிய வேடத்தில் நடிக்கிறார் என்பதும் அவரது தம்பியாக கார்த்தி நடிக்கிறார் என்பதும் அந்த எதிர்பார்ப்பை இன்னும் அதிகரிக்கவே செய்தது.

இந்த நிலையில் படத்திற்கு மிகப்பொருத்தமான தலைப்பாக தம்பி என பெயர் வைக்கப்பட்டுள்ளது.. இன்று இந்த படத்தின் டீசரும் வெளியாகி ரசிகர்களின் வரவேற்பை பெற்று வருகிறது.. இந்த படத்தில் கதாநாயகியாக நிகிலா விமல் நடிக்க மிக முக்கியமான வேடத்தில் சத்யராஜ் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப்படம் வரும் டிசம்பர் மாதம் வெளியாகிறது.