கார்த்தியுடன் மோதுவதற்கு பவர்புல் வில்லன் தயார்..!

abhimanyu-singh-vs-karthi

‘சதுரங்க வேட்டை’ இயக்குனர் வினோத் டைரக்சனில் தீரன் அதிகாரம் ஒன்று என்கிற படத்தில் நடிக்கிறார் கார்த்தி.. ஆக்சன் கதையாக உருவாகும் இந்தப்படத்தில் ஹீரோவுக்கு செம டப் கொடுக்கும் விதமாக வில்லன் கதாபாத்திரம் வடிவமைக்கப்பட்டு இருக்கிறதாம். இந்த வில்லன் கேரக்டரில் அபிமன்யு சிங் நடிக்க இருக்கிறார்..

வேலாயுதம், தலைவா படங்களில் விஜய்யுடனும், ரத்த சரித்திரம் படத்தில் சூர்யாவுடனும், ‘பத்து எண்றதுக்குள்ள’ படத்தில் விக்ரமுடனும் மோதியவர் தான் இந்த அபிமன்யு சிங்.. ஜிப்ரான் இசையமைக்கும் இந்தப்படத்தில் கதாநாயகியாக ராகுல் பிரீத் சிங் நடிக்க இருக்கிறார். ட்ரீம் வாரியர்ஸ் பிக்சர்ஸ் சார்பில் படப்பிடிப்புக்கான முதற்கட்ட பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.