விஜய்சேதுபதியின் ஆன்மாவை வருடிய கண்ணே கலைமானே!

மக்கள் மனதில் உறுதியாக நிற்க எந்தவொரு இயக்குனரும் தங்கள் திரைப்படங்களில் தீவிரத்தன்மையை கையாள்வது என்பது முக்கியம். அந்த படம் உயர்வதில் இருந்து அந்தந்த காலகட்டத்தின் சினிமா துறையின் வளர்ச்சியையும் அது உயர்த்துகிறது. இயக்குனர் சீனு ராமசாமியும் அதில் ஒருவர். அவரின் அனைத்து திரைப்படங்களிலும் அனைத்து கதாபாத்திரங்களையும் தீவிரத்தன்மையுடன் உருவாக்குவதை விரும்புபவர். இது இயக்குனராக விரும்பும் பலருக்கும் இன்ஸ்பிரேஷனாக அமைந்து விடுகிறது. இயக்குனரின் மிகவும் பொதுவான குணாதிசயத்தை ஒத்திருக்கும் நடிகர் உதயநிதி ஸ்டாலின், அவரது சகல பாத்திரங்களிலும் பொதுவான மனிதனின் தீவிரத்தை வெளிப்படுத்துகிறார். அதில் ஒரு கல் ஒரு கண்ணாடியின் மகிழ்ச்சியான இளைஞரும், மனிதனின் சாதிக்க துடிக்கும் வழக்கறிஞரும், நிமிர் படத்தின் பக்கத்து வீட்டு பையனும் அடக்கம்.

இயக்குனரின் முந்தைய படமான “தர்மதுரை”யும் பார்வையாளர்களிடம் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியது. இது நடிகை தமன்னாவிடம் ஒளிந்திருந்த நடிப்பு திறனை வெளிக்காட்டி, அவரது திரைவாழ்வில் ஒரு தனிப்பட்ட இடத்தை பிடித்திருக்கிறது. இப்போது, இந்த மூவரும் “கண்ணே கலைமானே” என்ற ஒரே படத்தில் இணைந்திருக்கிறார்கள். அது ரசிகர்களை ஈர்க்கத் தயாராக உள்ளது.

இயக்குனர் சீனு ராமசாமியின் நட்சத்திர மாணவரான் விஜய் சேதுபதி, படத்தை பார்த்து விட்டு, உணர்வு ரீதியான தனது கருத்தை தெரிவித்திருக்கிறார். இந்த படத்தின் மையப்புள்ளி “காதல் மற்றும் பெண்மையை” கொண்டு, மிக சிறப்பாக உருவாக்கப்பட்டுள்ளது. சீனு ராமசாமி பார்வையாளர்களை இணைக்கும் திரைப்படங்களுக்கான மனநிலையோடு இருக்கிறார். தமிழ்நாட்டின் கலாச்சார பாரம்பரியத்தை பற்றி கண்ணே கலைமானே உரத்த குரலில் பேசும். நல்ல கதையம்சம் உள்ள திரைப்படங்களை விரும்பும் ரசிகர்களின் இதயத்தை வெல்லும் படமாக இருக்கும் என்று நான் உறுதியாக நம்புகிறேன். இத்தகைய அழகிய படத்தை கொடுக்க உழைத்த தொழில்நுட்ப கலைஞர்கள் அனைவரையும் வாழ்த்தினார்.

மிகப்பெரிய நட்சத்திர பட்டாளத்தை கொண்டுள்ள இந்த படத்தில் நடிகர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் நடிகை தமன்னா முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள். நடிகை வடிவுக்கரசி மிக முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்க, ஷாஜி சென், “பூ” ராம் மற்றும் வசுந்தரா காஷ்யப் ஆகியோரும் நடித்திருக்கிறார்கள். படத்தை பார்த்த தணிக்கை குழுவினர் அனைவரும் பார்த்து ரசிக்கும் வகையில் ‘யு’ சான்றிதழை வழங்கியிருக்கிறார்கள். இந்த கிராமத்து கவித்துமான படத்திற்கு ஜலந்தர் வாசன் ஒளிப்பதிவும், காசி விஸ்வநாதன் படத்தொகுப்பும் செய்திருக்கிறார்கள். யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்திருக்கிறார். ரெட் ஜெயண்ட் சார்பில் உதயநிதி ஸ்டாலின் தயாரித்திருக்கிறார்.