1980 மறைக்கப்பட்ட ஒரு உண்மை சம்பவத்தின் அடிப்படையில் உருவாகும் ‘கங்கு’..!

kangu

நகுல் நடித்த பிரம்மா.காம் படத்தை இயக்கிய புருஷ் விஜயகுமார் ‘கங்கு ‘ என்கிற படத்தை இயக்குகிறார். 1960 மற்றும் 1980 மறைக்கப்பட்ட ஒரு உண்மை சம்பவத்தின் அடிப்படையில் இக்கதையை எழுதி இயக்குகிறார் புரூஷ் விஜய்குமார். அங்காளபரமேஸ்வரி சினி கிரியேஷன்ஸ் சார்பில் தயாரிப்பாளர் விக்னேஷ் சிவராமன் தன் முதல் படைப்பாக மிகுந்த பொருட்செலவில் மிகப்பிரமாண்டமாக இப்படத்தை தயாரிக்கிறார்

இன்று பூஜையுடன் துவங்கிய இத்திரைப்படம் மிகுந்த நுணுக்கத்துடன் அற்புதமாக உருவாகவுள்ளது. 1960 மற்றும் 1980 காலகட்டங்களை கண்முன் நிறுத்தும்படி மிகப்பிரமாண்டமான செட் போடப்பட்டு வருகிறது. மேலும் பல நிஜ லொகேஷன்களிலும் படப்பிடிப்பு நடைபெற உள்ளது.

இப்படத்தில் நிறைய புதுமுகங்கள் நடிக்க பல பிரபலங்களும் நடிக்க உள்ளனர்.மற்றும் படத்தில் மிகப்பெரிய டெக்னிஷீயன்கள் பணிபுரிய உள்ளனர். இன்று துவங்கிய பூஜையில் நடிகர் ராமகிருஷ்ணன், வடிவுக்கரசி, ஜாக்குவார் தங்கம் உடபட பல பிரபலங்கள் கலந்துகொண்டு வாழ்த்து தெரிவித்தனர்.