கமலுக்கு அடுத்து கார்த்தி தான் – ‘கொம்பன்’ ஆச்சர்யங்கள்..!

 

‘மெட்ராஸ்’ தந்த வெற்றியின் உற்சாகத்தில் இருக்கும் கார்த்தியை வைத்து ‘குட்டிப்புலி’ முத்தையா இயக்கிவரும் படம் தான் ‘கொம்பன்’.. ராமநாதபுரம் மாவட்ட பின்னணியில் நிகழும் கதைக்களத்தில் லட்சுமி மேனன் கதாநாயகியாக நடிக்க, ராஜ்கிரண் முக்கியமான வேடத்தில் நடிக்கிறார்.

தான் நடிக்கும் படங்களில் க்ளைமாக்ஸ் வரை வெறுமனே காதல் மட்டுமே பண்ணிவந்த கார்த்திக்கு, ஆச்சர்யமான விஷயமாக இந்தப்படத்தின் ஆரம்பத்திலேயே லட்சுமி மேனனுடன் திருமணம் நடந்து விடுகிறது. கார்த்தியின் மாமனாராக நடிப்பவர்தான் ராஜ்கிரண்.

இதுவரை தமிழ்சினிமா அவ்வளவு அதிகமாக தொடாத ஏரியாவான மாமனார்-மருமகன் பாசத்தை விலாவாரியாக விவரிக்க இருக்கிறது இந்த ‘கொம்பன்’.. சில நாட்களுக்கு முன் ‘மஞ்சப்பை’ மூலம் தாத்தாவாக மாறிய ராஜ்கிரண் இந்தமுறை மாமனார் அவதாரத்திலும் ஜொலிப்பார் என நம்பலாம்..

படத்தில் லட்சுமி மேனனின் பெயர் பழநி.. ஆம்.. ஊர்ப்பேர் தாங்க. இருபது வருஷத்துக்கு முன் ‘சதிலீலாவதி’ படத்தில் கமலுக்கு ஜோடியாக நடித்த கோவை சரளாவின்  பெயரும் ‘பழநி’ தான். அதில் அவரை ‘பழநிக்கண்ணு’ என கமல் அழைப்பதே சுவராஸ்யமாக இருக்கும். அதன்பின் இப்போதுதான் இப்படி ஊர்ப்பெயரை கதாநாயகிக்கு வைத்திருக்கிறார்கள்.. இதில் கார்த்தி எப்படி லட்சுவை அழைக்கப்போகிறாரோ பார்க்கலாம்.