கேப்டனையும் சந்தித்தார் உலக நாயகன்..!

kamal captain meet

விஜயகாந்த் ரஜினி இருவரையும் கூட பொது விழாக்களில் அடிக்கடி பார்த்திருப்போம்.. ஆனால் கமழும் விஜயகாந்தும் சந்தித்துக்கொண்டதாக வெளிப்பட்ட தருணங்கள் ஒன்றிரண்டு மட்டும் தான். அதிலும் விஜயகாந்த் அரசியலில் குதித்தபின் இவர்கள் இருவரும் சந்தித்துக்கொள்ளவே இல்லை என சொல்லலாம்.

ஆனால் பல வருடங்களுக்கு பிறகு இன்று கேப்டனை அவரது அலுவலகம் தேடிச்சென்று சந்தித்தார் கமல்.. தான் அரசியல் கட்சி துவங்குவதை முன்னிட்டு சமீப நாட்களாக பல அரசியல் தலைவர்களையும் நலம் விரும்பிகளையும் சந்தித்து வரும் அடிப்படையில் விஜயகாந்துடன் இன்று சந்திப்பு நிகழ்த்தியுள்ளார் கமல்.

விஜயகாந்தை சந்தித்தபின் செய்தியாளர்களை சந்தித்த கமல், “எனது அரசியல் பயணத்திற்கு அரசியலில் மூத்தவரான விஜயகாந்தை சந்தித்து வாழ்த்து பெற்றேன். சகோதரர் விஜயகாந்தை சந்தித்து நீண்ட நாட்கள் ஆவதால் நேரில் சந்திக்க வந்தேன். திராவிட அரசியலை பின்பற்றி வெற்றி பெற்று காட்டுவேன்” என நடிகர் கமல்ஹாசன்.

கடந்த 32 வருடங்களுக்கு முன் மனக்கணக்கு என்கிற ஒரே ஒரு படத்தில் கமலும் விஜயகாந்தும் இணைந்து நடித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது..