விஜய்யுடன் ‘மெர்சல்’ படம் பார்த்த கமல்..!

kamal watch mersal

விஜய்யின் மெர்சல் படம் கடந்த நான்கு நாட்களாக தமிழகத்தில் மட்டுமல்ல இந்திய அளவில் ஒரு பரபரப்பை உருவாக்கி விட்டது. மெர்சல் மீதான துவேசத்தை வெளிப்படுத்திவரும் தமிழக பாஜகவுக்கு தனது எதிர்ப்பை தெரிவிக்கும் விதமாக தனது குரலை வெளிப்படுத்தினார் உலகநாயகன் கமல்.

“ஒரு படைப்பை இருமுறை சென்சார் செய்யாதீர்கள். ‘மெர்சல்’ திரைப்படம் ஏற்கெனவே சென்சார் செய்யப்பட்டுவிட்டது. விமர்சனங்களைத் தெளிவான புரிதலுடன்கூடிய விளக்கங்களால் எதிர்கொள்ளுங்கள். விமர்சகர்களை வாயடைக்கச் செய்யாதீர்கள். விமர்சனங்கள்தான் இந்தியாவை ஒளிரவைக்கும்” என கமல் கூறிய கருத்து வரவேற்பை பெற்றுள்ளது..

இந்த நிலையில் மெர்சல் படம் கமலுக்காக சிறப்பு காட்சியாக திரையிடப்பட்டது.. படத்தை பார்த்துவிட்டு வெளியேவந்த கமல், படம் தனக்கு மிகவும் பிடித்துள்ளதாக கூறினார். இந்த நிகழ்வின்போது நடிகர் விஜய்யும் இயக்குனர் அட்லீயும் கமலுடன் படம் முடியும் வரை கூடவே இருந்தனர். அவர்களுடன் தேனாண்டாள் பிலிம்ஸ் முரளி, ஹேமா ருக்மணி ஆகியோரும் இந்த நிகழ்வில் உடனிருந்தனர்.