பிக்பாஸ் ; சீசன்-2வையும் கமலே தொகுத்து வழங்குகிறார்..!

big boss 2

கடந்த வருடம் விஜய் டிவியில் ஒளிபரப்பான ‘பிக்பாஸ்’ நிகழ்ச்சி ஆரம்பத்தில் சில விமர்சனங்களுடன் துவங்கினாலும் போகப்போக சூடு பிடித்து தினமும் ரசிகர்களை இரவு நேரத்தில் டிவி முன் கட்டிப்போட்டது. அந்த நூறு நாட்களிலும் இதில் பங்கேற்ற நட்சத்திரங்களில் ஓவியா, ஜூலி, காயத்ரி ரகுராம், ரைசா, சினேகன், பிந்துமாதவி என பலரும் தினசரி பரபரப்புக்கு திரி கொளுத்தியபடியே இருந்தனர்.

இவர்களை தவிர வாரந்தோறும் சனி, ஞாயிறு என இரண்டு நாட்கள் மட்டுமே என்ட்ரி கொடுத்தாலும் இந்த நிகழ்ச்சியை அவர் நடத்திய விதமும், போட்டியாளர்களிடம் அவர் பஞ்சாயத்து பண்ணிய விதமும் இன்னும் சுவாரஸ்யம் கூட்டின.. மேலும் கமல் அவ்வப்போது அரசியல்வாதிகளை, ஆளும் கட்சியை இடித்துக்காட்டுவதற்கும் இந்த நிகழ்ச்சியை ஒரு கருவியாக பயன்படுத்தினார்..

சொல்லப்போனால் இதில் அவருக்கு கிடைத்த வரவேற்பு தான் அவருக்கும் முழு நேர அரசியல்வாதியாகும் ஆசையை கூட தூண்டியது எனலாம். இந்தநிலையில் பிக்பாஸ் சீசன்-2 ஆரம்பிக்க இருப்பதாக சொல்லப்பட்டு வந்தது. கமல் அரசியலில் இறங்கிவிட்டதால் சீசன்-2வை அவர் நடத்த மாட்டார் என சொல்லப்பட்டது.. ஆனால் அதை பொய்யாக்கும் விதமாக சீசன்-2வையும் கமலே நடத்தவுள்ளார் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.