‘பரியேறும் பெருமாள்’ உருவாக்கியவர்களை வாழ்த்திய கமல்..!

Kamal Haasan Prises Pa Ranjith & Mari Selvaraj (3)

சமீபத்தில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் “பரியேறும் பெருமாள்” படத்தை பலரும் பாராட்டி வருகின்றனர். சாதிக்கொடுமையின் கோரமுகத்தை சட்டக்கல்லூரியின் பின்னணியில் புதிய கோணத்தில் இந்தப்படம் அலசியிருந்தது.

இந்நிலையில் இன்று படம் பார்த்த கமல்ஹாசன், “எனது நண்பர்கள் பலர் போன் செய்து பரியேறும் பெருமாள் படம் பாருங்கள் என்று சொன்னதால் படம் பார்த்தேன். மிக அருமையான நல்ல முயற்சி” என்று பாராட்டினார்.

மேலும் படத்தின் தயாரிப்பாளர் பா.இரஞ்சித்திடமும், இயக்குனர் மாரி செல்வராஜிடமும், “இந்த முயற்சியையும், பயிற்சியையும் தொடருங்கள்… உங்களுக்கு என் வாழ்த்துக்கள்” என்றார் கமல்.