பிப்-21ல் கட்சி துவங்குகிறார் கமல்..!

Kamal-hassan

ரஜினி தீவிர அரசியலுக்குள் நுழைவதற்கு முன் கமல் அரசியலில் தனது கருத்துக்களை தெரிவித்து வந்தார். ஆனால் ரஜினி தனிகட்சி தொடங்கி தேர்தலில் போட்டியிடப்போவதாக உறுதியாக அறிவித்து விட்டபின்னர், கமலின் தீவிரம் குறைந்துவிடும் என்றே பலரும் எதிர்பார்த்தார்கள்.

ஆனால் கமலோ முன்னைவிட வேகமாக வரும் பிப்.-21ம் தேதி தனது கட்சியின் பெயரை அறிவிப்பதுடன் ராமநாதபுரத்தில் இருந்து தனது சுற்றுப்பயணத்தையும் துவங்குகிறார். முதற்கட்டமாக மதுரை, திண்டுக்கல், ராமநாதபுரம், சிவகங்கை மாவட்ட மக்களை சந்திக்க உள்ளார்.

இதுகுறித்து கமல் வெளியிட்டுள்ள அறிக்கை: ஜனநயகத்தின் நாயகர்களை சந்திக்க சுற்றுப்பயணம் செய்ய உள்ளேன். உங்கள் ஆதரவோடு இந்த பயணத்தை துவக்குகிறேன். தலைவன் வழிநடத்தவே இருக்க வேண்டும். என்னை வளர்த்தெடுத்த சமூகத்திற்கு நன்றி தாண்டி ஆற்ற வேண்டிய கடமைகள் உள்ளன. இந்த சந்திப்பு புரட்சிக்காகவோ, கவர்ந்திழுக்கவோ அல்ல; எனது புரிதல் மற்றும் எனது கல்விக்காக மட்டுமே.

குடியரசில் குடிமக்களை உயர்த்த வேண்டும். அதை நோக்கி என் பயணம் இருக்கும். நாம் சேர்ந்து தேரை இழுக்கிறோம் என்ற எண்ணம் வேண்டும். அதுவே ஜனநாயகம். கரம் கோரத்திடுங்கள்; களத்தில் சந்திப்போம்” என அவர் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.