“கலாம் வாழ்ந்த காலத்தில் வாழ்ந்தது பாக்கியம்” – ரஜினி நெகிழ்ச்சி..!

 

மறைந்த நமது இந்திய முன்னாள் குடியரசுத்தலைவர் அப்துல் கலாமுக்கு நாடே கண்ணீர் அஞ்சலி செலுத்தி வருகிறது. இது குறித்து சூப்பர்ஸ்டார் ரஜினி வெளியிட்டுள்ள செய்தியில், “மாணவ சமுதாயத்தை அனைத்து நிலைகளிலும் ஊக்கப்படுத்தியவர். கலாம். உச்சநிலைக்கு சென்ற போதும் பணிவு, எளிமையாக வாழ்ந்தவர். மக்களுக்கு முன்மாதிரியாக வாழ்ந்தவர். மகாத்மா காந்தி, காமராஜர், பாரதியாரை பார்க்கும் பாக்கியம் கிடைக்கவில்லை. ஆனால், கலாம் வாழ்ந்த காலத்தில் வாழ்ந்தது பாக்கியம்.. அவரது ஆத்மா சாந்தியடையட்டும்”என கூறியுள்ளார்.