ராஜமௌலியிடம் தாணு வைத்த இன்னும் நிறைவேறாத கோரிக்கை..!

kalaipuli-s-thanu

எஸ்.எஸ்.ராஜமௌலியின் டைரக்சனில் ‘பாகுபலி’ படத்தின் இரண்டாம் பாகம் இன்னும் பிரமாண்டமாக உருவாகியுள்ளது. இதன் இசைவெளியீட்டு விழா நேற்று ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் நடைபெற்றது. இந்தவிழாவில் தனுஷ், கலைப்புலி தாணு உள்ளிட்ட பிரபலங்கள் கலந்துகொண்டனர்.

இந்த நிகழ்வில் பேசிய தாணு, கடந்த 13 வருடங்களுக்கு முன் ராஜமௌலியிடம் விஜய்யை வைத்து ஒரு படம் இயக்குங்கள்.. நான் தயாரிக்கிறேன் என்று கூறினாராம். ஆனால் அப்போது ராஜமௌலி தொடர்ந்து பிசியாக இருந்த காரணத்தினால் நிச்சயம் நாம் பின்னாடி பண்ணலாம் என கூறினாராம்.. விரைவில் அந்த திட்டம் நனவாகும் என நம்புகிறேன் என கூறியுள்ளார் தாணு.