ஹீரோவாக அறிமுகமாகிறார் ‘மெட்ராஸ்’ கலையரசன்..!

பெரிய ஸ்டார் நடிகர்கள் நடிக்கும் படங்களில் எப்போதாவது சில சமயங்களில் ஒரு புதுமுக நடிகர் அருமையாக தனது நடிப்பை வெளிப்படுத்தி அதன் மூலம் புகழ் வெளிச்சத்துக்குள் வருவது தமிழ்சினிமாவில் அவ்வப்போது நடப்பதுதான்.

அப்படி தற்போது அனைவராலும் கவனிக்கப்படும் நபராக மாறியிருப்பவர்தான் மெட்ராஸ்’ படத்தில் கார்த்தியின் நண்பனாக நடித்த கலையரசன். தற்போது இவர் பிரபல எழுத்தாளரான அஜயன் பாலா இயக்கும் ‘மைலாஞ்சி’ என்கிற படத்தின் மூலமாக கதாநாயகனாக உடனடி புரமோஷன் ஆகியிருக்கிறார்.

பிரபல இயக்குனர் விஜய்யுடன் இணைந்து இப்படத்தின் திரைக்கதையை அமைக்கிறார் அஜயன்பாலா. கிஷோர், ஈஸ்வரி ராவ், எழுத்தாளர் வேலா ராமமூர்த்தி, மதுரை முத்து ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்க, படத்திற்கான கதாநாயகி தேர்வு நடைபெற்று வருகிறது.

இயக்குனராக ஆனபின் வெளிப்படங்களுக்கு ஒளிப்பதிவு செய்வதற்கு விடை கொடுத்திருந்த இயக்குனர் தங்கர்பச்சன் நீண்ட இடைவேளைக்கு பிறகு இந்தப்படத்தில் ஒளிப்பதிவை மேற்கொள்கிறார். ஜோஸ்வா ஸ்ரீதர் இந்தப்படத்திற்கு இசையமைக்கிறார்.