காக்கிசட்டை படத்திற்கு ‘U’ சான்றிதழ்..!

 

தனுஷ் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள ‘காக்கிசட்டை’ படத்தின் ட்ரெய்லர் நேற்று வெளியாகி பட்டையை கிளப்பிக் கொண்டிருக்கிறது. இதுவரை நகைச்சுவை நடிகனாக வலம் வந்த சிவகார்த்திகேயனை இந்தப்படம் அடுத்த கட்டத்திற்கு நகர்த்தி செல்லும் என்பது உறுதி. இந்தப்படத்தை பார்த்த தணிக்கை குழுவினர் படத்திற்கு ‘U’ சான்றிதழ் வழங்கியுள்ளனர்.

துரைசெந்தில்குமார் இயக்கியுள்ள இந்தப்படத்தில் போலீஸ் வேடத்தில் நடித்துள்ள சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக ஸ்ரீதிவ்யா நடித்திருக்கிறார். அனிருத்தின் இசையில் ஏற்கனவே பாடல்கள் ஹிட் லிஸ்டில் சேர்ந்துவிட்டன. வருத்தப்படாத கூட்டணி மீண்டும் ஒரு வெற்றிக்கொடி கட்டட்டும்.