‘காக்கா முட்டை’க்காக காத்திருக்கும் பாபு ஆண்டனி..!

ஒரு காலத்தில் மிரட்டலான வில்லன் நடிகராக ரசிகர்களை கவர்ந்த மலையாள நடிகர் பாபு ஆண்டனி, காலமாற்றத்தால் பல வருடங்களுக்கு முன்பே குணச்சித்திர நடிகராக மாறிவிட்டார்.. தமிழ், மலையாளம், கன்னடம், இந்தி என அனைத்து மொழிகளிலும் பரவலாக நடித்து வரும் இவர், தனுஷ் தயாரிப்பில் மணிகண்டன் இயக்கிய தேசியவிருது பெற்ற ‘காக்கா முட்டை’ படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.

தற்போது அந்தப்படத்தின் ரிலீசை ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கிறேன் என்கிறார் பாபு ஆண்டனி. அதுமட்டுமல்ல லாரன்ஸின் காஞ்சனா முதல் பாகத்தில் நடித்திருந்த பாபு ஆண்டனி, தற்போது காஞ்சனா-2 படமும் வெற்றிகரமாக ஓடுவதற்காக, லாரான்சிற்கு தனது பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளார்.