‘காக்கா முட்டை’களின் படிப்பை இனி ‘பூமி’ கவனித்துக்கொள்ளும்..!


‘காக்கா முட்டை’ படத்தில் நடித்திருந்த பெரிய காக்கா முட்டை விக்னேஷ் மற்றும் சின்ன காக்கா முட்டை ரமேஷ் ஆகியோரின் படிப்பு செலவை அவர்கள் படித்து முடிக்கும் வரை ஏற்றுக்கொள்வதாக படத்தின் தயாரிப்பாளர்களான தனுஷும், வெற்றிமாறனும் ஏற்கனவே அறிவித்திருந்தார்கள் அல்லவா..?

இப்போது அவர்களுடன் அந்தப்படத்தை வெளியிட்ட பாக்ஸ் ஸ்டார் நிறுவனமும் கைகோர்த்திருக்கிறது. ‘பூமி’ என்கிற ஒரு ட்ரஸ்ட் மூலமாக இந்த சிறுவர்களின் மாதாந்திர படிப்பு செலவு, உணவு, உடை ஆகியவற்றுக்கான தொகை மாதந்தோறும் இவர்களுக்கு கொடுக்கப்பட்டு விடும்.

இந்த இருவருக்கும் 21 வயதாகும் வரை இந்த ட்ரஸ்ட் இவர்களது செலவுகளை கவனித்துக்கொள்ளும். அதுமட்டுமல்ல இவர்களுக்கு 21 வயது பூர்த்தியான பின்னும் கூட அவர்களது எதிர்கால தேவைகளுக்காக ஒரு மிகப்பெரிய தொகையையும் அவர்களுக்கு வழங்க இருக்கிறார்களாம்.