தேடிவந்த வாய்ப்பு ; இனி ‘கவலை வேண்டாம்’ காஜலுக்கு..!

 

‘யாமிருக்க பயமே’ படத்தை தொடர்ந்து டீகே இயக்கவுள்ள ‘கவலை வேண்டாம்’ படத்தில் கதாநாயகனாக ஜீவா, பாபி சிம்ஹா நடிக்கிறார்கள்.. எல்ரெட் குமார் இந்த படத்தை தயாரிக்கிறார். இந்தப்படத்திற்கான கதையை எழுதும்போதே இதில் ஜீவா, பாபி சிம்ஹா நடித்தால் தான் சரியாக இருக்கும் என நினைத்த இயக்குனர் டீகேவினால், எழுதி முடிக்கும் வரை கதாநாயகி ரோலுக்கு இன்னார் தான் செட்டாவார் என யூகிக்க முடியவில்லையாம்.

எழுதி முடித்தபின் கதாநாயகி கேரக்டரில் காஜல் அகர்வாலை தவிர வேறு ஒருவரை நினைத்தே பார்க்க முடிய வில்லையாம். காரணம் நடிப்பை உடல்மொழியாலும், உணர்வாலும் வெளிப்படுத்த வேண்டியவராகஇருக்க வேண்டும், அதே சமயம்  கதாநாயகனுக்கு இணையாக நடிக்க வேண்டிய பல காட்சிகளில்  மக்களிடையே நன்கு அறிமுகமான ஒரு நாயகி தான்  நடிக்க வேண்டும் என்கிற இயக்குனரின் எண்ணத்துக்கு காஜல் தான் உருவம் கொடுத்தாராம்.  அந்தவகையில் காஜலுக்கு இது தேடி வந்த அதிர்ஷ்டம் என்றே சொல்லவேண்டும்.