கடைக்குட்டி சிங்கம் படப்பிடிப்பு நிறைவு

kadaikutti singam wrapped

சூர்யாவை இயக்கிய கையோடு அடுத்ததாக கார்த்தியை வைத்து ‘கடைக்குட்டி சிங்கம் படத்தை இயக்கி வருகிறார் இயக்குனர் பாண்டிராஜ்.. நாயகியாக சாயிஷா மற்றும் ப்ரியா பவானி ஷங்கர், அர்த்தனா ஆகியோர் நடித்துள்ளனர். கார்த்தியின் அப்பாவாக சத்யராஜ், கார்த்தியின் அக்காக்களாக மௌனிகா, யுவராணி, தீபா, ஜீவிதா, இந்துமதி என்று 5 பேர் நடித்துள்ளனர்.

இந்தப்படத்தில் மாதம் 1½லட்சம் ரூபாய் சம்பாதிக்கும் கெத்தான விவாசாயி வேடத்தில் கார்த்தி நடித்துள்ளார். எப்படி இஞ்சினியர், டாக்டர் என்று எல்லோரும் தங்கள் பெயருக்கு பின் தாங்கள் செய்யும் வேலையை போட்டு பெருமையாக சொல்லிக்கொள்கிறார்களோ அதே போல் கார்த்தி தான் ஒரு விவசாயி என்பதை பைக் நம்பர் ப்ளேட் முதல் பல இடங்களில் பெருமையாக சொல்லிக்கொள்ளும் ஒரு கதாபாத்திரத்தில் வருகிறார்

இந்தப்படத்தின் படப்பிடிப்பை இன்று இனிதே நிறைவு செய்துள்ளார்கள்.. இதை கேக் வெட்டி கொண்டாடி மகிழ்ந்துள்ளனர் படக்குழுவினர்.