கடைக்குட்டி சிங்கம் படத்திற்கு ‘U’ சான்றிதழ்..!

kks censor 1

கிராமத்து படங்களை எடுப்பதில் வல்லவர் இயக்குனர் பாண்டிய ராஜ். அதனாலோ என்னவோ கார்த்தி நடிக்கும் கடைக்குட்டி சிங்கம் படத்தை முழுக்க முழுக்க கிராமத்து பின்னணியில் விவசாயம் சார்ந்து படமாக்கி உள்ளார். இந்த படத்தில் சாயிஷா சைகல், பிரியா பவானி ஷங்கர், சத்யராஜ், பானுப்ரியா, சூரி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். டி.இமான் இசையமைத்துள்ளார். இந்த படம் வரும் ஜூலை 13 ஆம் தேதி வெளியாக இருக்கிறது.

இந்த நிலையில் சமீபத்தில் இந்த படத்தை பார்த்த சென்சார் அதிகாரிகள் படத்திற்கு யூ சான்றிதழ் வழங்கி பாராட்டியுள்ளனர். அதற்கு முன்னதாக பிராணிகள் நலவாரிய அமைப்பின்னர் இந்த படத்தில் இடம் பெற்றுள்ள ரேக்ளா ரேசில் காளைகள் துன்புறுத்தப்பட்டிருப்பதாக கூறி ஆரம்பத்தில் எதிர்ப்பு தெரிவித்தனராம். ஆனால் இயக்குனர் பாண்டிராஜ், அந்த காட்சியை படமாகியது குறித்து, அவர்களுக்கு முறையாக விளக்கம் அளித்ததை தொடர்ந்து எந்தவித எதிர்ப்பும், எந்தவித கட்டும் குடுக்காமல், படத்திற்கு சென்சார் சான்றிதழ் கிடைத்துள்ளது.