மதுவிற்கு எதிரான பாடல் – கபிலனுக்கு விருது

KABILAN VAIRAMUTHU

கடந்த 20 வருடங்களாக பல்வேறு சமூக சேவை மற்றும் விழிப்புணர்வு பணிகளை ஆற்றிவரும் DVM சேவா பாலம் அமைப்பு ஒவ்வொரு ஆண்டும் வெவ்வேறு துறைகளில் சிறந்த பங்களிப்புக்கான விருதுகளை வழங்கி வருகிறது. இந்த ஆண்டு விருது பெறுவோரின் பெயர்கள் அறிவிக்கப்பட்டிருக்கின்றன.

தமிழகத்தில் நிலவும் மதுக் கலாச்சாரத்திற்கு எதிராக ஏந்திரு அஞ்சலி ஏந்திரு என்ற தனிப்பாடலை உருவாக்கிய கவிஞர் கபிலன்வைரமுத்துவுக்கு சிறந்த சமூக சிந்தனையாளருக்கான விருது வழங்கப்படுகிறது.

மகளிர்க்கு பாலியல் விழிப்புணர்வு ஏற்படுத்தும் முயற்சிகளை மேற்கொண்டிருக்கும் காவல்துறையின் சிலை தடுப்புப் பிரிவு ஆய்வாளர் காஞ்சனா எட்டுத் தோட்டாக்கள் திரைப்பட தயாரிப்பாளர் வெள்ளபாண்டியன் உள்ளிட்ட பலரும் விருது பெறுகிறார்கள்.

இதற்கான விழா வருகிற அக்டோபர் 2ஆம் தேதி சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள ரஷ்ய கலாச்சார மையத்தில் நடைபெறுகிறது. விழாவில் உயர்நீதிமன்ற நீதிபதி திருமதி ஹேமலதா தலைமை விருந்தினராக பங்கேற்கிறார்.