‘கபாலி’யுடன் கைகோர்த்த ஏர் ஆசியா..!

air asia with kabali 1

சூப்பர்ஸ்டார் ரஜினி நடித்து மிக பிரமாண்டமாக உருவாகியுள்ள ‘கபாலி’ படத்தின் பெரும்பாலான படப்பிடிப்பு மலேசிய உள்ளிட்ட பல வெளிநாடுகளில் நடந்து வந்தது அனைவருக்கும் தெரிந்ததுதான். இந்தநிலையில் தான் ‘கபாலி’ டீமின் விமானப்போக்குவரத்துக்கு கைகொடுத்து அவர்களது பயணத்தை இலகுவாக்கியது ஏர் ஆசியா விமான நிறுவனம்..

அதுமட்டுமல்லாது படத்தின் நிறைய காட்சிகளில் விமானமும் முக்கிய இடம்பெறுவதால் படப்பிடிப்புக்கு ஒத்துழைப்பு கொடுத்துள்ள ஏர் ஆசியா நிறுவனம், கபாலி படத்தின் அதிகாரப்பூர்வ ஏர்லைன் பங்குதாரர் ஆகவும் மாறியது.. இதை அறிவிக்கும் விதமாக தங்கள் சார்பாக ‘கபாலி’ பட போஸ்டர் ஒன்றையும் தங்களது லோகோவுடன் டிசைன் செய்து வெளியிட்டும் உள்ளது.