“பாட்டு எழுதும்போது இனி பார்த்து எழுதுங்க” கபடி வீரன் இயக்குனருக்கு பாக்யராஜ் அறிவுரை..!

kabadi veeran

ஆக்ஷன் ஸ்டார் அதிரடி அரசு கதை , திரைக்கதை, வசனம், பாடல்கள் எழுதி ஒளிப்பதிவு செய்து, இசையமைத்து இயக்கித் தயாரித்தும் இருக்கும் படம் “கபடி வீரன்”. இப்படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா சென்னை சாலிகிராமம் பிரசாத் லேப் ப்ரிவியூ திரையரங்கில் நடைபெற்றது. ஏலகிரி ஸ்ரீ மஹாசக்தி அம்மா, தொழிலதிபர் தமிழ்செல்வன், நடிகர் பானுச்சந்தர், அறிமுக நாயகி காயத்ரி உள்ளிட்ட இப்படக் குழுவினருடன் திரையுலக வி.ஐ.பிகள் கே.பாக்யராஜ், ராதாரவி, ஜாகுவார் தங்கம், நமீதா, ‘பவர் ஸ்டார்’ சீனிவாசன், உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

இவ்விழாவில் கலந்து கொண்டு பேசிய இயக்குநர் நடிகர் கே.பாக்யராஜ், “இந்தப்படத்தின் எல்லாமுமான அதிரடி அரசு பாட்டு எழுதும்போது கொஞ்சம் யோசிச்சு எழுதனுங்க.. என்னன்னா, காயத்ரி பாடும்போது “நான் பார்த்த ஆண்களிலேயே நீ வித்தியாசமானவன்” அப்படின்னு இருந்துச்சு. பொம்பளை பாடும்போது அப்படி எழுதக்கூடாது அதை கேட்டதும் எனக்கு ‘கருக்’குன்னு இருந்துச்சு. “ஆண்களில் நீ வித்தியாசமானவன்”னு இருக்கலாம்… அதுவரைக்கும் ஓ.கே.. ஹீரோயின் பேரு டேமேஜ் ஆகுற மாதிரி எழுதக்கூடாது புதுசா பாட்டு எழுத வந்திருக்கீங்க.. இனி பார்த்து எழுதுங்க.. . என்றவாறு பேசினார்.

முன்னதாக டத்தோ ராதாரவி ‘கபடி வீரன்’ படத்தின் பாடல்கள் ஆடியோவை வெளியிட திரைக்கதை மன்னன் கே.பாக்யராஜ் பெற்றுக் கொண்டார்.