கபடி, கிரிக்கெட்டை தொடர்ந்து கால்பந்து ; சுசீந்திரனின் புதிய ஆடுகளம்..!

தமிழ் சினிமாவில் விளையாட்டுக்கு முக்கியத்துவம் கொடுத்து படம் இயக்குனர் என்றால் அது சுசீந்திரன் ஒருவராகத்தான் இருக்கமுடியும். தனது அறிமுக படத்திலேயே கபடி விளையாட்டை கையாண்டு வெற்றிகண்டவர் அவர்.. தொடர்ந்து ‘ஜீவா’ படத்தை கிரிக்கெட் பின்னணியில் இயக்கியிருந்தார். இதோ தற்போது புட்பாலை மையமாக கொண்து தனது அடுத்த படத்தில் களமிறங்க தயாராகிவிட்டார்.

இந்தப்படத்தில் கதாநாயகனாக ரோஷன் நடிக்கிறார். கதாநாயகனின் இளம் பருவத்திற்காக நிக்னு தேர்ந்தெடுக்க பட்டிருக்கிறார் இவர் இயக்குநர் சுசீந்திரன் இயக்கிய ‘ஆதலால் காதல் செய்வீர்’ படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்தவர்.

அதுமட்டுமல்ல, ‘ஆதலால் காதல் செய்வீர்’ படத்துக்கு பிறகு இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜாவோடு சுசீந்திரன் இனையும் படம் இது. இப்படத்தில் நடிக்க வைப்பதற்காக நிஜ கால்பந்தாட்டக்காரர்களை இயக்குநர் சுசீந்திரன் தமிழகம் முழுவதும் தேடி வருகிறார்

தற்போது சுசீந்திரன் இயக்கியுள்ள ‘ஏஞ்சலினா’ என்கிற படம் ஆடியோ ரிலீஸுக்கும் அதை தொடர்ந்து பட வெளியீட்டுக்கும் தயாராகி வருகிறது.